பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கேள்வியும்

வீட்டினருகே நின்று பார்த்தால், வலதுபுறமும் இடதுபுறமும் சில வீடுகள் வரைதான் தெரியும். ஆனால் வளைந்துள்ள இடத்துக்கு நேரே எதிர் வரிசையிலுள்ள வீட்டினருகே நின்று பார்த்தால் முன்னிலும் அதிகமான வீடுகள்வரை பார்க்கமுடியும். அதனால் நீ வளைவிலிருந்து விலகி நிற்க நிற்க அந்த வளைவில் அதிகத் தூரம் கண்ணுக்குத் தெரிகிறது.

அதேமாதிரி பூமியும் உருண்டையாயிருப்பதால் நாம் பூமியைவிட்டு விலகி உயரமான இடத்தில் நின்றால் அதிக துாரம் கண்ணுக்குத் தெரிகிறது. அதாவது தொடுவானம் அதிகத் துரத்தில் தெரிகிறது.

109 அப்பா! கடலின் அடிப்பாகத்தில் என்ன இருக்கும்?

தம்பி! ஜலம் ஊறிப்போகாமல் இருப்பதற்காக அடிப்பாகத்தில் கட்டியான மண் இருக்கிறது. அநேக விதமான கடற் பாசிகள் காணப்படும். அவைகளை அலைகள் கரையில் கொண்டுவந்து தள்ளுவதைப் பார்த்திருப்பாய். அது போலவே சிப்பிகள் நுரைகள் சங்குகள் முதலியவைகளும் கரையில் வந்து விழுகின்றன. அதோடு அநேக விதமான மீன்களும் நண்டுகளும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் கடலில் அதிகமான ஆழத்துக்குப் போனால் அங்கே சூரிய வெளிச்சம் கிடையாது. ஆயினும் சில மீன்கள் உள. அவைகள் மின்மினிப் பூச்சிமாதிரி பிரகாசித்துக் கொண்டிருக்கும். அதனால் அங்கே இரவு போலவும் இரவில் நட்சத்திரங்கள் மட்டும் மின்னுவது போலவும் தோன்றும்.

110 அப்பா! கடல் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கடலுக்கு என்று ஒரு நிறம் கிடையாது. அதன்மீது விழும் ஒளியையும் அதனிடமிருந்து நமக்கு வந்து சேரும் ஒளியையும் பொறுத்துதான் அதன் நிறம். அதன்