பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கேள்வியும்

தென் கடல் தீவுகள் பக்கத்தில் கடலின் அடியில் நல்ல ஜல ஊற்றுகள் காணப்படுகின்றன. உள்ளே மூழ்கிப் போய் நல்ல ஜலம் எடுத்து வரலாமாம். அமெரிக்காவின் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் சில இடங்களில் நல்ல ஜலம் வந்து பனிக்கட்டியாகி துாள் தூளாக மேலே எழுந்து வரும்.

112 அப்பா! மீன்கள் இல்லாத கடல்கள் உண்டா?

தமபி! கடலில் ஜலம் உப்பாக இருந்தாலும் மீன்கள் போன்ற பிராணிகள் லட்சக் கணக்காக வாழ்ந்து வருகின்றன. ஆனல் பாலஸ்தீனத்தில் "மரணக் கடல்" என்று ஏரி ஒன்று இருக்கிறது. அதன் விஸ்தீரணம் 240 சதுர மைல். ஜோர்தன் என்னும் நதியின் ஜலம் அதில் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அதில் ஒரு பிராணி கூடக் கிடையாது. அந்த ஜலத்தில் அதிகமான உப்புக் காணப்படுகிறது. அதனால் அந்த ஜலத்தில் குதித்தால் மூழ்கிவிட மாட்டோம், மிதந்து கொண்டுதான் இருப்போம். அவ்வளவு கனமான ஜலம்.

113 அப்பா கடலில் மரஞ்செடிகள் வளர்வதுண்டா?

தமபி! கடலிலும் செடிகள் உள. கரையோரமாகக் கடற்பாசி உண்டாகிறது. அவற்றில் பல வகை உண்டு. அவை பல கஜ நீளம் உண்டாகவும் செய்யும். கரை ஒரத்தை விட்டுக் கடலுக்குப் போய்விட்டால், அங்கும் செடிகள் உள. அவை மிகச் சிறியவைகளாய் இருக்கும். ஆனால் வானில் நட்சத்திரங்களை விட அதிகமான தினுசுகளைக் காணலாம். கடலிலும் சாக பட்சிணிகள் உண்டு. அவை எல்லாம் இந்தச் செடிகளை உண்டுதான் ஜீவிக்கின்றன. அதிக ஆழமுள்ள கடலுக்குச் சென்றுவிட்டால் அங்கே ஒரே இருட்டாய் இருப்பதால் செடிகள் ஒன்றும் காணப்படா.