பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கேள்வியும்

மாகக் காற்றில் அலைகள் ஒன்றையடுத்து ஒன்றாக உண்டாகின்றன. குளத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டால் முதலில் அதைச் சுற்றி ஓர் அலை, அதன் பின் அந்த அலையைச் சுற்றி ஒர் அலை, இவ்விதமாக அலைகள் விரிந்து கரை வந்து சேர்வதைப் பார்த்திருப்பாய். அதேபோல் நாம் வஸ்துவைத் தட்டினால் காற்றில் உண்டாகும் அலைகளும் நம்முடைய காதில் வந்து சேர்கின்றன. அந்த விஷயத்தை அங்குள்ள நரம்பு மூளைக்குத் தெரிவிக்கிறது. உடனே நாம் சப்தம் கேட்பதாக அறிகிறோம். ஆகவே எதைக் கொண்டேனும் காற்றில் அலை உண்டாக்கினால், அப்பொழுது சப்தம் உண்டாகும். நாம் பேசும் பொழுது சுவாசப் பையிலிருந்து காற்றை வெளியாக்கி அதன் மூலம் காற்றில் அலை வெள்ளத்தை உண்டாக்குகிறோம். அதைத்தான் நாம் பேசுவதாகவும் பேச்சுக் கேட்பதாகவும் கூறுகிறோம்.

116 அப்பா! சங்கு ஊதுவது காலையில் கேட்கிறது, மத்தியானம் கேட்கவில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! காலையில் ஊர் அடங்கியிருக்கும். ஜனங்களும் எழுந்திருக்கவில்லை. பட்சிகளும் விழித்துக் கொள்ளவில்லை. அதனால் நிசப்தமாயிருக்கும். அப்பொழுது சங்குச் சப்தம் ஒன்று தான் உண்டு. அநதச் சப்தம் உண்டாக்கும் காற்று அலைகளைத் தடுக்க வேறு அலைகள் எதுவும் உண்டாகவில்லை. அதனல் தான் சங்குச் சப்தம் அதிகாலையில் வெகு தெளிவாகக் கேட்கிறது. ஆனால் மத்தியானத்தில் ஜனங்களின் இரைச்சல் அதிகமாய் இருக்கும். அதனால் சங்குச் சப்தம் அதில் ஆழ்ந்து போய்விடுகிறது. அதனால்தான் சங்குச் சப்தம் மத்தியானத்தில் கேட்பதில்லை, கேட்டாலும் தெளிவாகயிராது. நன்ருகக் கவனித்தால் தான் கேட்கமுடியும்.

117 அப்பா! வீட்டுக்குள் பேசினாலும் வெளியே கேட்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! குளத்தில் கல்லை வீசினால் அது விழுந்த இடத்திலிருந்து வட்ட வட்டமாக அலைகள் விரிந்து கொண்டே