பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கேள்வியும்

வீட்டுக்குள் உட்கார்ந்து பேசும்பொழுது சப்த அலைகளில் சில முன்போல உன் காதுக்கு வந்து சேருகின்றன. பாக்கியுள்ள அலைகள் சுவர்களில் மோதுகின்றன். கடலில் அலைகள் கரையில் மோதினால் அங்கிருந்து திரும்பிவரும். அதுபோல் சப்த அலைகளும் திரும்பி விடுகின்றன. அப்படித் திரும்பும் அலேகளும் உன் காதுக்கு வந்து சேர்கின்றன ஆகவே இப்பொழுது உன் காதுக்கு அதிகமாக அலைகள் வந்து சேர்கின்றன. அதனால்தான் வீட்டுக்குள் உட்கார்ந்து பேசும்பொழுது நண்பருடைய குரல் உரத்த சப்தமாகக் கேட்கிறது.

ஆனல் அப்படி உரத்த சப்தமாகக் கேட்க வேண்டுமானால் சுவர்கள் 50 அடி துாரத்துக்குள்ளாகவே இருக்க வேண்டும். அப்படியானல்தான் நேராக வரும் அலைகளும் சுவரில்பட்டு வரும் அலைகளும் ஒரே சமயத்தில் உன் காதுக்கு வந்து உரத்த குரலாய்க் கேட்கும். சுவர்கள் 50 அடிக்கு அப்பால் இருந்தால், நேராகவரும் அலைகள் வந்து சிறிது நேரம் சென்ற பின்பே, சுவரில் ப்ட்டுவரும் அலைகள் வந்து சேரும். அதனால் முதலில் உன் நண்பருடைய குரலைக் கேட்பாய் அதன்பின் அதன் எதிரொலியைக் கேட்பாய். உன்னுடைய நண்பர் குரல் முன்போல் உரத்த சப்தமாகக் கேட்காது.

119 அப்பா! போத்தலிலிருந்து ஜலத்தை ஊற்றில்ை “கள கள" என்று சப்தம் கேட்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒரு பாத்திரத்திலிருந்து ஜலத்தைக் கீழே ஊற்றினால் ஜலம் கீழே விழ விழ அது இருந்த இடத்தில் வெளியேயுள்ள காற்றுப்போய் உட்கார்ந்து கொள்ளும். போத்தலிலிருந்து ஜலம விழும்பொழுது அப்படித்தான். ஆனல் போத்தலின் வாய் சிறிதாயிருப்பதால் ஒரே சமயத்தில் ஜலம் வெளியே வரவும் காற்று உள்ளே போகவும் கஷ்டமாயிருக்கும். அதனால் காற்று சிறு சிறு குமிழிகளாகத்