இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பட்டுப் புடவையும் அங்குஇல்லை;
பாத்திர பண்டமும் அங்குஇல்லை;
பொட்டணத் துள்ளே இருந்ததெல்லாம்
புத்தகம், புத்தகம், புத்தகமே !
அரசர் கொடுத்தது ஐந்துநூறு.
அத்தொகை யாவுமே புத்தகமாய்
இருப்ப தறிந்ததும், ஐயையோ,
“ஏனோ இப்படிச் செய்துவிட்டீர்!
எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை.
இப்படிக் காசைக் கெடுப்பதுவோ ?”
சினத்துடன் மனைவி பேசிடவே,
சிரித்துமே பாரதி கூறினரே ;
“பட்டுப் புடவை, வெள்ளியிலே
பாத்திரம், பண்டங்கள் வாங்காமல்,
பட்டணம் சென்றே வீணாகப்
பணத்தைக் கெடுத்ததாய் எண்ணுகிறாய்.
அழிகின்ற செல்வம் நான்கொடுத்தே
அழியாத செல்வம் கொண்டுவந்தேன்.
அழகழ கான கருத்தையெலாம்
ஆனந்த மாகப் படித்தறிவோம்”
101
2960-7