பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உடனே காகம் அருகில் சென்றே
உற்று நன்றாய்ப் பார்த்த பின்னர்,
“அடடே இந்தக் காவல் காரர்
யாரோ என்று நினைத்தி ருந்தேன்.

வைக்கோல் மேலே துணியைச் சுற்றி
வைத்தி ருக்கும் பொம்மை என்றே
இக்க ணத்தே நண்பர் அறிய
எடுத்துச் சொல்வேன்” என்று கூறி

காவல் காக்கும் பொம்மை தலையில்
காலை வைத்து நின்று கொண்டு,
கூவி அழைத்துப் பறவை யாவும்
கூடச் செய்து விட்ட தங்கே !


104