உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குதிரை கொடுத்தது!

“கையி லுள்ள ரேகை தன்னைக்
கவன மாகப் பார்த்துமே,
ஐய மின்றிக் குறிகள் சொல்வார்
அடுத்த ஊரில் வந்துளார்.”

என்றே ஒருவர் சொல்லக் கேட்டே,
எழுந்து வேணு என்பவர்
சென்றே அங்த மனிதர் தம்மைத்
தேடிப் பிடித்துக் கூறினார் ;

விரைவில் பணத்தைச் சேர்க்க நானும்
விரும்பு கின்றேன். ஆதலால்,
குறுக்கு வழிகள் ஏதும் உண்டோ ?
குறிகள் பார்த்துக் கூறுவீர் ?”

கையைப் பிடித்துப் பார்த்து விட்டு,
“கணக்காய் நானும் கூறுவேன்.
ஐயா, குதிரை யாலே நீங்கள்
அடைவீர் செல்வம், நிச்சயம்”

109