பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படத்தில் ரொட்டியின் மணமிருந்தால்
பார்த்துக் கொண்டா நாய்நிற்கும் ?
உடனே ஓவியர் கனவானை
உற்றுப் பார்த்தார் சிரித்தபடி.

“எப்படி உருவம் இருக்கிறது ?
இயல்பாய் இதுவும் இல்லையெனில்,
அப்படி நாயும் நக்கிடுமோ?
அசலாய் உங்கள் உருவம்தான் !”

என்றே ஓவியர் கூறியதும்,
ஏதும் கூற வழியின்றி
முன்னர் ஒப்புக் கொண்டபணம்
முழுதும் கொடுத்தார் அக்கனவான் !


114