இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்து, பவளம், மணி இழைத்த
தேரைப் பாரடி-அதில்
மிடுக்கு டனே செல்லும் அந்த
மனிதர் யாரடி ?
எத்தி சையும் புகழ் மணக்கும்
பாரி தானடி-அவர்
இல்லை யென்றே சொல்லி டாத
வள்ள லாமடி.
சாலை ஓரம் அந்தத் தேரும்
நிற்ப தேனடி ?-அங்கே
சட்டென் றவரும் கீழிறங்கிப்
பார்ப்ப தென்னடி ?
மாலைக் காற்றில் ஆடி அசையும்
முல்லைக் கொடியடி- அதை
வழியில் கண்டே வேகமாக
இறங்கி னாரடி.
உற்றே அந்தக் கொடியை அவரும்
பார்ப்ப தேனடி ?-அவர்
உள்ளம் நொந்து முகமும் வாடி
நிற்ப தேனடி ?
115