உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மானின் விடுதலை

பையன் :
புள்ளி மானே, கோபம்நீ
கொள்வ தேனோ, கூறுவாய் ?

மான் :
கட்ட விழ்த்து விட்டிடு.
காட்டை நோக்கிப் போகிறேன்

பையன் :
ஒருவி னாடி கூடநான்
உன்னை விட்டி ருப்பேனோ ?

மான் :
உடனே நீயும் புறப்படு.
ஒன்றாய்க் காடு செல்லலாம்.

10