பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நேருஜியும் தேளும்

ஜெயிலில் நேரு இருந்த போது
நடந்த நிகழ்ச்சியைத்
தெரியும் வகையில் உங்க ளுக்குக்
கூறப் போகிறேன்.
வெயிலின் கொடுமை தாங்கி டாமல்
தேளில் ஒன்றுமே
மெல்ல அவரின் அறையி னுள்ளே
வந்து சேர்ந்ததாம் !

கண்ட வுடனே நேரு பதற்றம்
கொள்ள வில்லையாம்.
கல்லைத் தூக்கி மேலே போட்டுக்
கொல்ல வில்லையாம் !
“என்ன செய்தார்?” என்று தானே
நீங்கள் கேட்கிறீர் ?
எடுத்துச் சொல்வேன்; பொறுமை யோடு
கேளும் நண்பரே.

சுருக்குப் போட்டுக் கயிற்றி னாலே
கொடுக்கில் கட்டினர்;
தூக்கிச் சுவரில் தேளைக் கட்டித்
தொங்க விட்டனர்;

119