பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உமியும் அரிசியும்


உழுத வயலில் அழகனும்
உமியை விதைத்து வைத்தனன்.
மூளையும் கிளம்ப வில்லையே;
மூன்று மாதம் ஆனதே !

உழுத வயலில் அரிசியை
ஓடி ஓடி விதைத்தனன்.
முளையும் கிளம்ப வில்லையே,
மூன்று மாதம் ஆனதே !

உழுத வயலில் அரிசியும்
உமியும் சேர்ந்த நெல்லையே
அழகன் விதைத்து வைத்தனன்.
அதுவும் வீணாய்ப் போகுமோ ?

இல்லை, இல்லை. முளையுமே
எழும்பி மேலே வந்தது.
பல்லைக் காட்டி அழகனும்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனன்.

121