இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொக்கை வாயைத் திறந்து காந்தி
புன் சிரிப்பு சிரித்தார்.
“மிக்க நல்ல பென்சில் இதனை
விடவே மனமும் வருமோ ?
சென்னை நகரில் இருந்த போது
சின்னப் பையன் ஒருவன்
அன்ப ளிப்பாய்த் தந்த திந்த
அருமைப் பென்சில்!” என்றார்.
‘இந்தியன் ரெவ்யூ’ என்ற பத்திரிகையை நடத்திய வரும், பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவரு மாகிய காலஞ்சென்ற ஜி. ஏ. நடேசன் அவர்களின் புதல்வனே அந்தச் சிறுவன்.
125