உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்ன வேண்டும்

எங்கள் பள்ளியின் முன்னாலே
இருந்தது சிறிய கடைஒன்று.

அந்தக் கடையில் புதிதாக
அன்றொரு பொம்மை இருந்ததனால்,

அதனைப் பார்க்க மாணவர்கள்
அங்கே கூட்டம் போட்டனரே.

நந்தன், கோபு, சாம்புவுடன்
நானும் சென்றேன், கடைமுன்னே.

“வேண்டிய தென்ன? சொல்லிடுவீர்.
வீணாய்க் கூட்டம் போடாதீர்”

என்றே அந்தக் கடைக்காரர்
எங்களைப் பார்த்துக் கூறினரே.

126