பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பையில் ஒரு கா சில்லாமல்
பார்த்துக் கொண்டே நாங்களுமே

அங்கே நின்றோம். அச்சமயம்
அவசர மாக ஒருபையன்

ஓடி வந்தான். அவன்கையை
உற்றுப் பார்த்தார் கடைக்காரர்.

வந்தவன் கையில் ஒரு ரூபாய்
வட்ட மாக இருந்திடவே,

“வெட்டிக் கூட்டம் போடாமல்
விலகிப் போங்கள், கழுதைகளா !”

என்றே கூறிக் கோபமுடன்
எங்களைப் பிடித்துத் தள்ளியபின்,

பணத்துடன் வந்த பையனையே
பரிவுடன் அருகில் வரவேற்றே,

“என்னடா தம்பி வேண்டும்?”என
இதமாய்க் கேட்டார் கடைக்காரர்.

பணத்தைப் பையன் நீட்டினனே.
பக்குவ மாகக் கூறினனே!

"அவசரம், அவசியம், ஆனதனால்
அப்பா இங்கே அனுப்பினரே.

127