உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணபதியும் கந்தனும்

தொந்திப் பிள்ளை யாருடன்
துணைவ னாகக் கந்தனும்

பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர்.

வழியில் பெரிய மலையிலே
வாய்க்கு நல்ல பழங்களாய்

இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.

‘குடுகு’ டென்று குமரனே
குதித்து மலையில் ஏறினன்.

மலையைக் கண்டு பிள்ளையார்
மலைத்துத் தொந்தி தடவினார்.

‘களைப்பு அதிகம் ஆனது.
காலும் மெத்த வலிக்குது.

13