இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
பட்டென அறைகள் விட்டாராம்.
திருடன், திருடன் என்றவனைத்
திட்டினர், அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிஷம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் எனவே பெயரெடுக்க
‘சட்’டென முடியும். ஆனாலோ,
நல்லவன் என்ற பெயர்பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர்உண்மை.
அடைவோம், இதனால் பெருநன்மை.
16