பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பல் உடைந்த முருகையன்

மோட்டார் ஓட்டி முருகையன்
மூர்க்கத் தனங்கள் மிக்கவனாம்.

காட்டின் வழியாய் இரவினிலே
காரை ஓட்டிச் செல்லுகையில்,

விளக்கின் ஒளியைக் கண்டதுமே
மிரண்டு காட்டு மிருகங்கள்,

பார்வை சிறிதும் தெரியாமல்
பதறித் துடித்து நின்றிடுமே.

முயல்கள் வழியில் நின்றிட்டால்
முருகன் காரை அவைமேலே

ஏற்றிக் கொன்று, அவற்றினையே
எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

நாட்கள் தோறும் முயல்கட்கு
நமனாய் அன்னவன் ஆனானே!

17