உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருநாள் அந்த வழியினிலே,
உள்ள மைல்கல் ஒன்றிற்கு

வெள்ளை யடித்து இருந்ததனால்
வெள்ளை முயல்போல் தோன்றியதே !

முருகன் அதனை முயலெனவே
முட்டாள் தனமாய் எண்ணிவிட்டான்.

விட்டான் காரை அதன்மேலே,
‘பட்’டெனக் கல்லில் மோதியதே !

காரின் முன்னால் இருந்திட்ட
கண்ணா டியுமே நொறுங்கியதே !

பட்டது காயம், பலமாக.
பற்கள் இரண்டு போயினவே !

‘முயலைக் கொன்று தின்றிட்ட
முன்னம் பற்கள் உடைந்தனவே !

ஐயோ, உயிரைக் கொன்றேனே !
அதனால் கடவுள் தண்டித்தார்’

என்றே எண்ணி முருகனுமே
இளகிய உள்ளம் பெற்றனனே.

18