உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பூனை— என்ன செய்வேன்? இந்தப் பொந்தோ
        சின்னஞ் சிறியது.
என்னிடத்தில் இருக்கும் பண்டம்
        மிகவும் பெரியது !

எலி -
பிட்டுப் பிட்டுச் சிறிது சிறிதாய்
எனது வளையிலே
போட்டு விட்டுப் போக லாமே
பூனை நண்பரே.

பூனை -
கல்லைப் போலக் கடினமாகப்
பண்டம் இருப்பதால்,
கடித்துக் கொறிக்கும் சக்தி உன்போல்
எனக்கும் இல்லையே !

எலி -
இல்லை யானால், தொல்லை யில்லை.
வளையின் வாயிலே
இனிப்புப் பண்டம் அதனைப் போட்டுச்
செல்வீர் நண்பரே,

பூனை -
வளையின் அருகே போட்டுச் சென்றால்
என்ன ஆகுமோ ?
வட்ட மிட்டுத் திரியும் காகம்
விட்டு வைக்குமோ ?

20