இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எலி -
ஆசை காட்டி மோசம் செய்யும்
அற்பப் பூனையே,
அசடு நானும் அல்ல, அல்ல.
அறிந்து கொள்ளுவாய்.
பூனை-
அடடா ! இதுபோல் நீயும் என்னை
நினைக்க லாகுமோ ?
அருமை யான பண்டந் தன்னை
மறுக்க லாகுமோ ?
இனிப்பை நானும் தின்ப தற்கா
வருந்தி அழைக்கிறாய் ?
இல்லை; இல்லை. என்னைப் பிடித்துத்
தின்னப் பார்க்கிறாய்.
உலகில் உள்ள பண்டம் யாவும்
கிடைப்ப தாயினும்,
உயிரைக் கொடுக்க உலகில் எவரும்
துணிந்து வருவரோ ?
வளையை விட்டே உனது வயிற்றில்
வந்து சேர்ந்திட
மடைய னல்ல. வழியைப் பார்த்து
கடையைக் கட்டுவாய் !
21
2960-2