இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணை மூடிக் கொள்ளுவாய்.
காட்டு கின்றேன். முட்களை’
என்று தந்தை கூறவே
இறுகக் கண்ணை மூடினன்.
சிறிது நேரம் சென்றதும்,
திறந்து பார்க்கக் கூறினர்.
கண்ணைத் திறந்து பார்த்ததும்
கண்டான் இரண்டு முட்களை !
மகிழ்ச்சி பெற்ற கோபுவும்
‘மந்திரந்தான் என்னவோ !
எனக்குத் தெரியச் சொல்லுவீர்’
என்று கெஞ்சிக் கேட்டனன்.
கோபு தெரிந்து கொள்ளவே
கூற லானார், தந்தையும் :
“பார்த்தாய் கடிகாரத்தினை,
பன்னி ரண்ட டிக்கையில்.
சிறிய தோடு பெரியமுள்
சேர்ந்து ஒன்றாய் நின்றதால்,
23