உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏமாற்றம்


ஒருநாள் இரவு படித்திடவே
உட்கார்ந் தேன்நான் தங்கையுடன்

‘கடகட’ எனவே ஒருசத்தம்
கதவி லிருந்து வந்ததுவே.

‘யாரது?’ என்றே நான்கேட்டேன்.
யாரும் ‘நான்தான்’ எனவில்லை !

திரும்பப் பதிலே வரவில்லை.
திருடன் எனவே எண்ணிவிட்டேன்

பயத்தால் என்னுடல் நடுங்கியது.
பார்த்தனள் தங்கை; சிரித்தனனே.

‘ஐயோ! அச்சம் கொள்கின்றாய்.
ஆணோ நீதான்? எனக்கேட்டாள்

எழுந்தேன் விரைவாய், இடம்விட்டே.
எடுத்தேன். தடியைக் கைதனிலே

43