இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூவரும் சண்டை போட்டார்கள்.
முடிவே இல்லை. ஆதலினால்,
மூவரும் சேர்ந்து என்றனுக்கு
முப்பெயர் இட்டு அழைத்தார்கள்.
அம்மா வுக்கு, சம்பந்தம்.
அப்பா வுக்கு, செல்லப்பன்.
பாட்டிக் கோநான் பரமசிவன்.
பள்ளியில் இனிமேல் எப்பெயரோ!
46