பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.வெண்ணெய் திருடிய கண்ணன்

கண்ணன் வெண்ணெய் திருடித் தின்ன
எண்ணங் கொண்டனன்.
கள்ளத் தனமாய் ஒருவர் வீட்டின்
உள்நு ழைந்தனன்.
வெண்ணெய் முழுதும் தின்று, தின்று
தீர்த்துக் கட்டினன்.
வீட்டுக் காரி வந்து விட்டாள்;
மாட்டிக் கொண்டனன்!

‘வெண்ணெய் திருடித் தின்னு கின்ற
திருட்டுக் கண்ணனே,
வெளியில் போன சமயம் பார்த்துத்
திருட வந்ததேன்?
உன்னை உனது தாயி டத்தில்
இழுத்துச் சென்றுநான்
உரலில் கட்டி வைக்கச் சொல்வேன்’
என்று கூறினள்.

47