உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தைச் சண்டை



பட்டு என்ற சிறுமியும்
பார்ப்ப தற்கே அழகுடன்
பட்டு ஆடை உடுத்தியே
பாலு வீடு வந்தனள்.

ஒன்று சேர்ந்து இருவரும்
ஓடி யாட வீதியில்,
அன்று ஏதோ சண்டையும்
அவர்க ளுக்குள் வந்ததே !

சண்டை தன்னில் பாலுவோ
தள்ளி விட்டான், பட்டுவை.
அண்டை ஓடும் சாக்கடை
அதனில் பட்டு வீழ்ந்தனள்.
 
பட்டு மீது கெட்டநீர்
பட்ட தாலே ஆடையும்
கெட்டுப் போச்சு, ‘ஓ’வெனக்
கிளம்ப லாச்சு, அழுகையும்.


லியோ டால்ஸ்டாயின் கருத்தைத் தழுவியது.

49