பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பு ஒன்றை ஊன்றியே
கனிந்த வயதுப் பாட்டியும்
வம்பு மூண்ட அவ்விடம்
வந்து கூற லாயினள்.

‘பிள்ளை போட்ட சண்டையைப்
பெரிது செய்யும் மக்களே,
சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள்.
சுத்த மூடச் செய்கையேன்?

சண்டை மறந்து பிள்ளைகள்
சரச மாக அன்புடன்
ஒன்று சேர்ந்து திரும்பவும்
ஓடி யாடல் பாருங்கள்’

என்று பாட்டி கூறவே
எதிரில் வந்து பார்த்தனர்.
அன்பு கொண்டு பிள்ளைகள்
ஆடல் கண்டு வெட்கினர்!

51