பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொக்கக் கோவென என்தாயும்
கூப்பிட நானும் ஓடிடுவேன்.

அன்புடன் என்னைப் பத்திரமாய்
அழைத்துச் செல்வாள் அவளுடனே.

குப்பை கிளறி ஆகாரம்
கொத்தித் தின்னப் பழக்கிடுவாள்.

பருந்தைக் கண்டால் இறக்கைக்குள்
பதுக்கி என்னை வைத்திடுவாள்.

குருணையோடு தானியங்கள்
கொடுக்கின் றார்கள் மனிதர்களும்.

தின்று தின்று என்உடலும்
தினமும் கொழுத்து வருகிறது.

என்னை இப்படி வளர்த்திடுவோர்
என்று கழுத்தைத் திருகுவரோ?

ஈசன் கருணை புரிவாரோ!
எனது உயிரைக் காப்பாரோ !

54