இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“சீன வெடிகள் எங்குமே
தேடிப் பார்த்தும் இல்லையே.
காண வில்லை கண்ணிலே,
கடைகள் தோறும் சென்றுமே.
கம்பி வாணப்பெட்டிதான்
கடைசி யாக வாங்கினேன்.
வம்பு இன்றி இதனைநீ
மகிழ்ச்சி யோடு கொளுத்துவாய்”
என்று தந்தை தந்தனர்.
இதனைக் கேட்ட சீனுவோ,
“ஒன்றும் வேண்டாம்” என்றனன்.
உதறி அதனைத் தள்ளினன்.
பட்ச ணங்கள் தின்னவோ
பட்டு ஆடை உடுத்தவோ
“இஷ்டம் இல்லை” என்றனன்;
எவர் உரைத்தும் பயனில்லை.
59