உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னுடை உயிரும் தப்பியதே,
தங்கம், வெள்ளி, நகையுடனே.
நன்றி மிகவும் உள்ளதென
நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே.

மனமகிழ் வுடனே அந்நாயை
மகனினும் மேலாய்ப் போற்றினரே.
தினமும் சோறு வைத்தனரே,
தின்றிடல் கண்டு மகிழ்ந்தனரே.

63