பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழியினில் உட்கார்ந் துட்கார்ந்து
வங்தோம் மலையின் உச்சிக்கே.

மணிகள் மூன்று ஆயினவே
மலையின் உச்சி அடைந்திடவே.

திவ்விய தரிசனம் செய்தோமே.
தின்றிட உணவும் பெற்றோமே.

பெறுதற் கரிய காட்சியினைப்
பெற்றோம் அன்று வாழ்வினிலே,

மலையைக் கடந்து இறங்கிடவே
மறுநாட் காலை புறப்பட்டோம்.

‘விறுவிறு’ எனவே கீழ்நோக்கி
விரைவில் இறங்கி வந்திட்டோம்.

சிரமம் சிறிதும் இல்லாமல்
சீக்கிர மாக வந்ததனால்,

மலையின் அடியை அடைந்திடவே
மணிகள் இரண்டே ஆயினவே.

அடியில் வந்ததும் தந்தையெனை
அருகில் அழைத்துக் கூறினரே;

‘சென்றிட மலைக்கே மூன்றுமணி
சென்றது ; அத்துடன் சிரமங்கள்

66