உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்னை மொழி


குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது.

நித்தம், நித்தம் குருவியும்
நீண்ட துரம் சென்றிடும்;
கொத்தி வந்து இரைதனைக்
குஞ்சு தின்னக் கொடுத்திடும்.

‘இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுவீர்.
இரையைத் தேடித் தின்னலாம்’
என்று குருவி சொன்னது.

‘நன்று, நன்று, நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்’
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின.

68