இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒன்று மட்டும் சோம்பலாய்
ஒடுக்கிக் கொண்டு உடலையே,
அன்று கூட்டில் இருந்தது !
ஆபத் தொன்று வந்தது !
எங்கி ருந்தோ வந்தனன்,
ஏறி ஒருவன் மரத்திலே,
அங்கி ருந்த கூட்டினை
அடைய நெருங்கிச் சென்றனன்.
சிறகு இருந்தும் பறக்கவே
தெரிந்தி டாமல் விழித்திடும்
குருவிக் குஞ்சைப் பிடித்தனன் ;
கொண்டு வீடு சென்றனன்.
குருவிக் குஞ்சு அவனது
கூட்டில் வாட லானது.
அருமை அன்னை உரைத்தது
அதனின் காதில் ஒலித்தது.
69
2960-5