உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தி வாக்கு


சென்னையி லிருந்து மதுரைக்குச்
சென்றேன் ரயிலில், அன்றொருநாள்.

இரவு முழுதும் வண்டியிலே
இருந்தேன்; மறுநாள் காலையிலே,

திருச்சி வந்தது. பலகாரம்
தின்றிட இறங்கிச் சென்றேனே.

வடையும் காபியும் அங்கொருவர்
வைத்து விற்றனர். பார்த்ததுமே,

பைக்குள் கையை விட்டேனே.
பணத்தை விரைவாய் எடுத்தேனே.

எடுத்தே அவரிடம் கொடுத்தேனே.
எனது பசியைத் தீர்த்தேனே.

மறுபடி வண்டியில் ஏறியதும்,
வண்டி நகர்ந்தது, விரைவுடனே.

70