உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனித வேட்டை

காட்டில் உள்ள மிருகமெலாம்
கூட்டம் ஒன்றைக் கூட்டினவாம்.
வேட்டைக் காரர் தொல்லைகளை
விவர மாகப் பேசினவாம்.

“துப்பாக்கியினால் நம்மையெலாம்
சுட்டுக் கொல்லும் மனிதர்களை
இப்போ தேநாம் பழிவாங்க
எழுந்திடுவோம்” எனப் புலிசொல்ல,

“இப்படி வாயால் பேசிடுதல்
எளிதே. ஆனால், மனிதர்களை
எப்படிப் பழிநாம் வாங்குவதோ ?”
என்றே சிங்கம் கேட்டிடவே,

குள்ள நரியும் முன்வந்தே
கூறிட லானது சபைதனிலே:
“நல்ல யோசனை ஒன்றுண்டு.
நானிப் பொழுதே கூறிடுவேன்.

75