பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடியும் நேரம் நகர் அருகே
விரைந்தே அவைகள் செல்லுகையில்,
இடிஇடி யென்றே பெரும்சப்தம்
எழுந்தது காதும் அதிர்ந்திடவே!

சப்தம் கேட்டதும் மிருகமெலாம்
சட்டென நின்றன. பயத்துடனே.
“எப்படி நாமும் வருவதனை
இந்த மனிதர்கள் அறிந்தனரோ?

துப்பாக் கியினால், ஐயையோ,
சுடுகின் றார்கள் வருமுன்னே !
தப்பிப் பிழைக்க வேண்டுமெனில்,
சடுதியில் திரும்பி ஓடிடுவீர் !

உள்ளே சென்றால் ஆபத்து !
ஓடுவீர், ஓடுவீர்” என்றங்கே
குள்ள நரியும் நடுநடுங்கிக்
கூறிய வுடனே, மிருகமெலாம்

ஓட்டம் பிடித்தன காட்டிற்கே
ஒருநொடி கூட நில்லாமல் :
காட்டு மிருகம் அனைத்தையுமே
கலக்கிய சப்தம் அறிவீரோ?

77