பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த அருமைப் பெண்ணுக்கு
ஐந்து வயது தானிருக்கும்.
இந்த ஊரில் அவ்வயதில்
எனக்கு வேண்டும், ஒருகுழந்தை.

கொஞ்சி அதனுடன் விளையாட,
கொண்டு வந்தால் நலம்’ என்றே
கெஞ்சிக் கேட்டான், அவ்வீரன்.
கேட்டதும் உடனே அவ்விடத்தே,

அழைத்து வந்தனர், ஒருபெண்ணை.
அதற்கும் வயது ஐந்தேதான்.
பழத்தை எடுத்து அவள்கையில்
பரிவுடன் கொடுத்தான், அவ்வீரன்.

‘உன்னைப் போலவே என்மகளும்
உயரம் இத்தனை வளர்ந்திருப்பாள்.
என்னைக் கண்டதும் துள்ளிடுவாள் ;
இனிக்கும் பேச்சுப் பேசிடுவாள்,

கூறினன் இப்படி மகிழ்வுடனே,
கொட்டிய கண்ணீர்த் துளியுடனே.
வாரியே அந்தச் சிறுபெண்ணை
மகிழ்வுடன் கொஞ்சி வாழ்த்தினனே!

80