உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘கழுத்தை வெட்டிக் கறிச மைத்துக்
களித்தே உண்பார், மனிதர்கள்.
குளிரைப் போக்க அவர்க ளுக்குக்
கொடுக்கின் றீர்கள், கம்பளி.

தின்று வளர இலையும், தழையும்
தினமும் தந்த மரத்தினை,
நன்றி கெட்டுத் தோல் உரித்தல்
நியாய மாமோ, கூறுவீர் ??’

90