இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்றன இரண்டு நாட்களுமே,
சீமான் நிலைமை அறிந்திடவே,
வெளியில் கிளம்பிச் சென்றனரே;
வீதிகள் எங்கும் சுற்றினரே,
ஒவ்வொரு கடையாய்ப் பார்த்தனரே.
ஒன்றிலும் இல்லை அவர்படமே !
எல்லாக் கடையிலும் தேடினரே.
எங்கும் மேற்படி மேற்படியே !
எப்படிப் போயின படங்களெலாம் ?
என்றே அவரும் எண்ணுகையில்,
அருகில் ஓர்கடை முதலாளி
அவரது நண்பர் ஒருவரிடம்
கூறிய வார்த்தைகள் அவர்காதில்
கூரிய வேல்போல் பாய்ந்தனவே:
“ஊர்பெயர் தெரியா ஒருவனது
உருவப் படத்தை ஒருமடையன்
கண்ணா டியுடன் என்னிடத்தே
கடையில் மாட்டத் தந்திருந்தான்.
95