இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளே இருந்த அவன்படத்தை
உடனே நன்றாய்க் கிழித்தெறிந்தேன்.
அதற்குப் பதிலாய் என்படத்தை
அழகாய் ஒட்டி வைத்துள்ளேன்.
இங்கே பாராய்!” என்றவனும்
எடுத்துக் காட்டினன் ஒருபடத்தை.
கேட்டனர் சீமான் அவ்வுரையை,
‘கிர்ர்’ ரெனத் தலையும் சுற்றியதே !
“அந்தோ, இதுபோல் என்படங்கள்
அனைத்தும் நாசம் ஆயினவோ !
எத்தனை ஆயிரம் செலவழித்தேன்
எல்லாம் வீண் வீண் !” என்றனரே.
96