பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்றன இரண்டு நாட்களுமே
சீமான் நிலைமை அறிந்திடேவ,

வெளியில் கிளம்பிச் சென்றனரே;
வீதிகள் எங்கும் சுற்றினரே;

ஒவ்வொரு கடையாய்ப் பார்த்தனரே.
ஒன்றிலும் இல்லை அவர்படமே !

எல்லாக் கடையிலும் தேடினரே.
எங்கும் மேற்படி மேற்படியே!

எப்படிப் போயின படங்களெலாம்?
என்றே அவரும் எண்ணுகையில்,

அருகில் ஓர்கடை முதலாளி
அவரது நண்பர் ஒருவரிடம்

கூறிய வார்த்தைகள் அவர்காதில்
கூரிய வேல்போல் பாய்ந்தனவே:

"ஊர்பெயர் தெரியா ஒருவனது
உருவப் படத்தை ஒருமடையன்

கண்ணா டியுடன் என்னிடத்தே
கடையில் மாட்டத் தந்திருந்தான்.

41