பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பள்ளியிற் சள்ளை பொல்லாதே!-உடன்
பயில்பவர் மீதுநீ கோளும் சொல்லாதே!
கள்ளத் தனத்தைக் கொள்ளதே!-செல்லாக்
காசாவாய்! கற்காமல் நாளைத் தள்ளாதே! 9

கற்றுத் தெளிவதே மேன்மை!-கல்வி
கல்லாத மக்களால் வருவதே தீமை!
பெற்றவர் காதுக்குத் தேனாம்-பிள்ளை
பேச்சாளி, அறிவாளி என்பது தானாம்! 10




குழந்தை இலக்கியம் 99