பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58

தொழிலைப் போற்ற வேண்டும்!
தொழிலைப் போற்ற வேண்டும்!
தொழிலில் இழிவே இல்லை!
சோம்பி வாழ்ந்தால் தொல்லை! 1

ஏரைப் பூட்டி உழுதே
மழையில் லாமல் அழுதே
காரை விளைத்தல் யார்க்காம்?
கண்ணே மணியே! ஊர்க்காம்! 2

கல்லை உடைத்து வைத்தே
கடைகால் சுவரும் எடுத்தே
இல்லம் சமைத்தல் யார்க்காம்?
எழிலோ வியமே! ஊர்க்காம்! 3

தட்டித் தட்டி அறுத்தே
சமனாய்ப் பலகை இழைத்தே
பெட்டி செய்தல் யார்க்காம்?
பிள்ளைக் கனியே! ஊர்க்காம்! 4


124 ★ கவிஞர் வாணிதாசன்