பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



60

ண்டை வீட்டில் கிழவன்!
அவனும் நல்ல உழவன்!
ஒண்டி யாக வாழ்ந்தான்!
ஒருமகன் துணைக்கும் இருந்தான்!

1

படிக்கச் சொல்லிப் பார்த்தான்;
பள்ளிக் கழைத்துப் பார்த்தான்;
அடித்துக் கிள்ளிப் பார்த்தான்!
மகனும் அழுது தீர்த்தான்!

2

பையன் படிக்க வில்லை!
படிப்பில் விருப்பம் இல்லை!
வெய்யில் நிழல்போல் ஓடி
வீணாள் போக்கினான் ஆடி!

3

உழுத அலுப்புத் தானோ,
உண்ணா அலுப்புத் தானோ?
கிழவன் ஒருநாள் நோயில்
கிடந்தான் வீட்டுப் பாயில்!

4


குழந்தை இலக்கியம் ♦ 129