பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோளில் தாயைத் தந்தையைக்-கட்டித்
தூக்கி வந்த விந்தையை
ஆளும் அமைச்சன் கண்டான்;-அவன்
அருகில் வந்து நின்றான்!

4

பழுத்த கிழங்கள் தூக்கியே-வெள்ளப்
பாழைத் தாண்டும் சிறுவனே!
கொழுத்த செல்வம் இருக்கையில்-குற்
றுயர்எதற் கோதான்? என்றனன்.

5

பெற்ற அன்னை தந்தையே-என்றும்
பேசும் செல்வம் ஆகுமே!
மற்ற செல்வம் யாவுமே-நாட்டில்
வந்து வந்து போகுமே!

6

என்று சிறுவன் கூறினான்!-எதிர்
இருந்த வன்முகம் மாறினான்!
என்றும் அன்னை தந்தையே-ஈடு
இல்லாச் செல்வம் ஆகுமே!

7


குழந்தை இலக்கியம் ★ 133