பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



68

மொந்தைத் தயிரை எடுத்தே,
முட்டையும் பெட்டையும் எடுத்தே
சந்தையில் கொண்டு விற்கப் போனாள்
தன்னை வளர்த்த அன்னை!

1

பத்து மணிக்கு வீட்டின்
பக்கம் இருக்கும் கூட்டில்
புத்தம் புதிய முட்டை யொன்று
பொன்னி இருக்கக் கண்டாள்!

2

குனிந்து முட்டை எடுத்தாள்;
‘கோழியிங் கேதெ’ன நினைத்தாள்;
‘முனியன் வீட்டுக் கோழி இட்ட
முட்டை’ எனமுணு முணுத்தாள்!

3

முனியன் வீட்டை அடுத்தாள்;
முட்டையைக் கொண்டு கொடுத்தாள்!
முனியன் அன்னை பொன்னியை வாழ்த்தி
முத்தப் பரிசு கொடுத்தாள்!

4


146 ♦ கவிஞர் வாணிதாசன்