பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழை கமுகு மலர்த்தோட்டம்!
வற்றா ஆற்றின் நீர்ஒட்டம்!
ஏழை மலையும் தேன்ஈட்டம்!
எங்கும் என்றும் கார்ஆட்டம்! 5

குளத்துள் எருமை கற்குன்றம்!
குயிலின் பாட்டோ இசைமன்றம்!
களத்து மேடோ பொதுமன்றம்!
கழனி யோரம் பூமன்றம்! 6

கிழக்கு மேற்கு நீள்கடலும்,
தெற்குக் குமரிப் பெருங்கடலும்,
அழகில் வேங்கட வடத்திடலும்
அமைந்த நாடுன் உயிர்உடலும்! 7

மன்னர் வாழ்ந்த பொன்னாடே!
வழங்கி வாழ்ந்த நன்னாடே!
இன்னல் அறியாப் பெருநாடே!
இமயம் வென்ற துன்நாடே! 8

கற்றோர் வாழ்ந்த கலைநாடு!
கடராம் வென்ற சிலைநாடு!
பொற்றேர் அளித்த பொன்னாடு!
புறம்அகம் கண்ட உன்நாடு! 9

வள்ளல் பிறந்தது. உன்நாடு!
வரிசிலை கண்டது உன்நாடு!
அள்ளும் சிலம்பும் மேகலையும்
குறளும் அளித்த துன்நாடே! 10


குழந்தை இலக்கியம் ♦ 161