பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

நிலவே! நிலவே! வாராயோ?
நீ பகல் எங்குச் சென்றாயோ?

உலகிற் கல்லார் உன்னிடத்தில்
ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே! அந்தக் கிழவிக்கு
நீரும் சோறும் கொடுப்பதியார்?- நிலவே!

அரிவாள் போல வான்தோன்றி
அழகாய் நாளும் வளர்கின்றாய்!
பெரிய வெள்ளித் தட்டாகிப்
பின்ஏன் குறைந்து தேய்கின்றாய்?- நிலவே!

தம்பி, தங்கை உனக்குண்டோ?
சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம் என் தம்பி!
வாட்டம் தீர்க்க வருவாயே!- நிலவே!


14 ♦ கவிஞர் வாணிதாசன்