பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

பூவிற் சிறந்தது தாமரையே!
பொலிவிற் சிறந்தது தாமரையே I
வாவிக் கழகு தாமரையே!
வளரும் குளத்தில் தாமரையே! 1

ஆடாப் பம்பரம் மொட்டாகும்!
அடர்ந்த இலைகள் தட்டாகும்!
நாடாத் துறட்டு முள்தண்டாம்!
தாமரை நற்காய் கற்கண்டாம்! 2

தம்பி முகமே தாமரைப்பூ!
தங்கை முகமே தாமரைப்பூ!
தம்பிப் பையன் பெருஞ்சிரிப்பு
தாமரைப் பூவின் இதழ்விரிப்பு! 3

தாமரை பூத்துக் கண்பறிக்கும்!
தாவத் தண்டு காலறுக்கும்!
தாமரை இதழ்கள் வெண்பட்டு!
தரையில் சாகும் கதிர்பட்டு! 4


குழந்தை இலக்கியம் ♦ 25