பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உருளை சேமை புளிமூட்டை
உடன்கொண் டேகும் கைவண்டி!
வருவோர் போவோர் யாவரையும்
வயிற்றில் நிரைக்கும் நகர்வண்டி!
இருளைப் போக்கும் தெருவிளக்கோ
எழுந்த நிலவின் பெருங்கூட்டம்!
தெருவில் என்றும் நடமாட்டம்!
வேண்டும் முன்பின் கண்ணோட்டம்! 3

ஊரின் நடுவில் புகைவண்டி
ஒடும் பற்பல திசைமுண்டி!
ஏரி குட்டை குளமில்லை!
எங்கும் குழாயில் நீருண்டு!
வாரிக் கூட்டும் தொழிலாளி!
வருவார் போவார் நோயுண்டு!
சேரி மக்கள் தெருவோரம்
செய்வார் மனையறம் பலநேரம்! 4

கலைகள் வளர்க்கும் பெருமன்றம்!
கருத்தை அளிக்கும் தமிழ்மன்றம்!
உலையை வளர்த்துத் தொழில்பெருக்கும்!
ஆலை உண்டு; பொருள்பெருக்கும்!
சிலையைத் தாங்கிப் பொதுமன்றம்
சிரிக்கும் எவரையும் வரவேற்கும்!
தலையைத் திருத்தும் தொழிலாளி
அறையில் இசைக்கும் வானொலியே!5


30 ♦ கவிஞர் வாணிதாசன்